by Staff Writer 21-07-2020 | 1:51 PM
Colombo (News 1st) யாழ். தென்மராட்சி மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்துக்கு அருகில் ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் உயிரிழந்துள்ளன.
இந்தச் சம்பவம் நேற்றிரவு (20) 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே மாடுகள் உயிரிழந்துள்ளன.
உயிரிழந்த மாடுகளுக்கு எவரும் இதுவரை உரிமை கோரவில்லையென சாவகச்சேரி பிரதேச சபையின் வெளிக்கள மேற்பார்வை உத்தியோகத்தர் கைலாயபிள்ளை சிவநேசன் தெரிவித்துள்ளார்.