மூளாய் பகுதியில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்காபரணங்கள் கொள்ளை

மூளாய் பகுதியில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்காபரணங்கள் கொள்ளை

மூளாய் பகுதியில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்காபரணங்கள் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2020 | 4:08 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்காபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 1.45 அளவில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 16 1/2 பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாள் மற்றும் கோடரிகளுடன் வீட்டினுள் நுழைந்த 06 பேர், வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்