மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 54 வருட கடூழிய சிறைத்தண்டனை

மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 54 வருட கடூழிய சிறைத்தண்டனை

மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 54 வருட கடூழிய சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2020 | 5:18 pm

Colombo (News 1st) மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 54 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி வசந்த ஜினதாச முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2011 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி, பிரதிவாதி தமது 11 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பிரதிவாதி மதுகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்