போராட்டங்களை கட்டுப்படுத்த சட்ட அதிகாரிகளை அனுப்பவுள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கை

போராட்டங்களை கட்டுப்படுத்த சட்ட அதிகாரிகளை அனுப்பவுள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கை

போராட்டங்களை கட்டுப்படுத்த சட்ட அதிகாரிகளை அனுப்பவுள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2020 | 11:04 am

Colombo (News 1st) அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகளை மேலதிகமாக அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் ஆட்சியிலுள்ள சிக்காகோ, நியூயோர்க் உள்ளிட்ட மாநிலங்களின் தலைவர்கள், நடவடிக்கை எடுப்பதற்கு அச்சமடைந்துள்ளதாக ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரிகன் மாநிலத்திற்கு தம்மால் அனுப்பப்பட்ட அதிகாரிகள், போர்லேண்ட்டில் இடம்பெற்ற போராட்டத்துக்கு மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டும் சிறப்பான பணியை செய்து முடித்துள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தநிலையில் சமஷ்டி அதிகாரிகள் பிரச்சினைகளை மேலும் மோசமாக்குவதாக உள்ளூர் அதிகாரிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, போர்லேண்ட்க்கு அனுப்பப்பட்ட அதிகாரிகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீள பெற வேண்டுமென மாநில தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்