உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2020 | 6:09 am

Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் அனுசரணையில் நடைபெறவிருந்த உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது.

COVID – 19 தொற்றின் தாக்கத்தினை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்பாடு செய்கின்ற உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவிருந்தது.

தொடர் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நடத்தப்படவிருந்தது.

எனினும், தற்போதைய COVID – 19 தொற்றின் அபாயத்தினை கருத்திற் கொண்டு தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

தொடரை சிறப்பான முறையில் நடத்துவதற்காகவும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்