இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2020 | 11:14 am

Colombo (News 1st) மாதாந்தம் 5,000 ரூபா கையூட்டு பெற்றுக் கொண்ட உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான குறித்த பொலிஸ் இன்ஸ்பெக்டர், மிரிஹான பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் கடமையாற்றுபவர் என விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த வழக்கிலிருந்து விடுதலையான நபர் மீது மீண்டும் வழக்கு தொடர்வதாக தெரிவித்து சந்தேக நபர் மாதாந்தம் 5,000 ரூபா இலஞ்சம் பெற்றுள்ளார்.

ஜூன் மாதத்திற்கான இலஞ்ச பணத்தை பெற்றுக் கொள்ளும் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்