A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

by Staff Writer 20-07-2020 | 12:24 PM
Colombo (News 1st) இந்த ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகளுக்கான புதிய திகதிகளை அறிவித்தார். கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் திகதி நடத்தவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை, ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் நவம்பர் 16 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.