பாட்டலி, சுதத் அஸ்மடல மற்றும் சாரதிக்கு அழைப்பாணை 

பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுதத் அஸ்மடல மற்றும் சாரதி திலும் குமாரவுக்கு அழைப்பாணை 

by Staff Writer 20-07-2020 | 3:23 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதி திலும் குமார மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல ஆகியோரை எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இராஜகிரிய வாகன விபத்து தொடர்பில் அழைப்பாணை விடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (20) உத்தரவிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சிலவற்றின் கீழ் சட்ட மா அதிபரால் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, அடுத்த வழக்கு விசாரணைகளையும் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க தீர்மானித்துள்ளார்.