by Staff Writer 19-07-2020 | 12:46 PM
Colombo (News 1st) கிரிபத்கொடை - நாஹேனவத்த, சிறிபுர பகுதியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களனி பகுதியில் மறைந்திருந்த 2 சந்தேக நபர்கள், களனி பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேநேரம், கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பன்னிப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காகப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் ஆயுதங்கள் ஆகியன பேலியகொடை பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளையைச் சேர்ந்த 28, 29 மற்றும் 32 வயதுடைய 3 சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.