இளம் வீராங்கனை Ekaterina Alexandrovsk உயிரிழப்பு

இளம் பனிச்சறுக்கு வீராங்கனை Ekaterina Alexandrovskaya உயிரிழப்பு

by Staff Writer 19-07-2020 | 8:18 AM
Colombo (News 1st) பனிச்சறுக்கு விளையாட்டு வீராங்கனையான எக்கட்டரீனா அலெக்ஸான்ரோவ்ஸ்கயா (Ekaterina Alexandrovskaya) தனது 20 ஆவது வயதில் மொஸ்கோவில் உயிரிழந்துள்ளார். ரஷ்யாவில் பிறந்த அவர் அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்தார். அவுஸ்திரேலிய பழங்குடியின வீரரான Harley Windsor உடன் இணைந்து 2018 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா அவருக்கு குடியுரிமை வழங்கியிருந்தது. அவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உபாதை காரணமாக பனிச்சறுக்கு விளையாட்டில் இருந்து கடந்த பெப்ரவரியில் அவர் ஓய்வு பெற்றிருந்தார். அலெக்ஸான்ரோவ்ஸ்கயாவுக்கு இவ் வருட ஆரம்பத்தில் வலிப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக அவரது பயிற்றுவிப்பாளர் Andrei Khekalo தெரிவித்துள்ளார்.