பிரேசிலில் சட்டவிரோத காடழிப்புகளுக்கு காரணமாகியுள்ள சோயா, மாட்டிறைச்சி ஏற்றுமதி

பிரேசிலில் சட்டவிரோத காடழிப்புகளுக்கு காரணமாகியுள்ள சோயா, மாட்டிறைச்சி ஏற்றுமதி

பிரேசிலில் சட்டவிரோத காடழிப்புகளுக்கு காரணமாகியுள்ள சோயா, மாட்டிறைச்சி ஏற்றுமதி

எழுத்தாளர் Bella Dalima

18 Jul, 2020 | 4:20 pm

Colombo (News 1st) பிரேசிலின் சோயா மற்றும் மாட்டிறைச்சி ஏற்றுமதி செயற்பாடுகள் சட்டவிரோத காடழிப்பிற்குக் காரணமாவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரேசிலின் சோயா ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பகுதி சட்டவிரோத காடழிப்பிற்கு வழிவகுப்பதாக குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காடுகளை அழித்து மேற்கொள்ளப்படும் சோயா செய்கை மற்றும் கால்நடைப் பண்ணைகளை அடையாளம் காண்பதற்காக, உலக வரைபடங்களையும் தரவுகளையும் ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

பண்ணைகள் மற்றும் செய்கை நிலங்களில் 2 வீதமானமை 62 வீதமான காடழிப்பிற்குக் காரணமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது சர்வதேச ரீதியில் சுற்றுச்சூழலுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்