பிரான்ஸில் 15 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயத்தில் தீ பரவல்

பிரான்ஸில் 15 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயத்தில் தீ பரவல்

பிரான்ஸில் 15 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயத்தில் தீ பரவல்

எழுத்தாளர் Bella Dalima

18 Jul, 2020 | 10:33 pm

Colombo (News 1st) பிரான்ஸின் மேற்கு பிராந்தியத்திலுள்ள Nantes நகரிலுள்ள புனிதர்களான இராயப்பர், சின்னப்பர் பேராலயத்தில் தீ பரவியுள்ளது.

இந்த ​பேராலயத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் தீ பரவ ஆரம்பித்துள்ளது.

தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்ளூர் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

15 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த பேராலயத்தில் ஏற்பட்ட தீப்பிழம்புகளால் பேராலயத்தின் அலங்கார வேலைப்பாடுகள், வண்ணமயமான கண்ணாடி ஜன்னல்கள் என்பன சேதமாகியுள்ளன.

எனினும், பேராலயத்தின் கூரையில் தீ பற்றவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பேராலயத்திற்குத் தீ மூட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும் அது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் குண்டுத்தாக்குதலின் போதும் இந்த தேவாலயம் எரிந்து பகுதியளவில் சேதமடைந்தது.

1972 இல் ஏற்பட்ட தீ விபத்தில் கூரை முற்றுமுழுதாக சேதமடைந்தது. 13 வருடங்களின் பின்னரே பேராலயம் புனரமைக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்