by Staff Writer 17-07-2020 | 3:50 PM
Colombo (News 1st) கொலன்னாவை உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை (18) பகல் 2 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகளுக்காக நாளை பகல் 2 மணி முதல் நாளை மறுதினம் காலை 9 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதி, இராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் இராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய குறுக்கு வீதிகளுக்குமான நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.