அங்குலானை பொலிஸ் நிலையம் மீது கல்வீச்சு: 8 பொலிஸார் காயம், 14 பேர் கைது

அங்குலானை பொலிஸ் நிலையம் மீது கல்வீச்சு: 8 பொலிஸார் காயம், 14 பேர் கைது

அங்குலானை பொலிஸ் நிலையம் மீது கல்வீச்சு: 8 பொலிஸார் காயம், 14 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2020 | 4:18 pm

Colombo (News 1st) அங்குலானை பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 8 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு காயமேற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று ​(16) அமைதியின்மை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

கடந்த 11 ஆம் திகதி இரவு வீதித் தடைக்கு அருகே பொலிஸாருடன் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த குறித்த நபரின் உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று ஒன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்