English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Jul, 2020 | 1:22 pm
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன SSC விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் கழகத்தின் வருடாந்த கூட்டத்தின் போது இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 12 வருடங்களாக SSC விளையாட்டு கழகத்தின் தலைவராக செயற்பட்ட சமந்த தொடன்வல, கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகளை இளம் தலைவர் ஒருவர் முன்னெடுக்க இடமளிக்கும் நோக்கில் பதவியில் இருந்து விலகினார்.
1997 இல் கொழும்பு நாலந்தா கல்லூரியில் மாணவராக இருந்த காலப்பகுதி முதல் மஹேல ஜயவர்தன SSC விளையாட்டுக் கழகத்துடன் இணைந்துள்ளார்.
அந்த வருடத்திலேயே ஒருநாள் சர்வதேச அரங்குக்குள் நுழைந்த அவர் 448 போட்டிகளில் 19.77 அரைச் சதம் உள்ளடங்கலாக 12,650 ஒட்டங்களை பெற்றுள்ளார்.
149 டெஸ்ட் போட்டிகளில் 34.50 அரைச் சதங்களுடன் 11,814 ஓட்டங்களை பெற்றுள்ள மஹேல, இருபதுக்கு 20 போட்டிகளிலும் பிரகாசித்த வீரராவார்.
தேசிய அணித் தலைவராக உலகக்கிண்ண இறுதிப்போட்டி வரை அணியை வழிநடத்திய அவர், சர்வதேச அரங்கிற்கு விடைகொடுத்த பின்னர் IPL கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டார்.
இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக மஹேல ஜயவர்தன பல்வேறு சந்தர்ப்பங்களில் பங்களிப்பு வழங்கியுள்ளதுடன் நேரடி கருத்துகளையும் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
25 Jan, 2021 | 09:47 PM
25 Jan, 2021 | 03:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS