by Staff Writer 16-07-2020 | 8:20 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சாத்வீகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், பொருட்களின் விலையேற்றத்தினால் மேலும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையில் இன்று சாத்வீகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மாத்தறை பஸ் நிலையத்திற்கு முன்பாகவும், ஹம்பாந்தோட்டை - அம்பலன்தோட்டையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குருணாகல் நகரில் மற்றுமொரு அறவழிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.