Colombo (News 1st) 2022-இல் கட்டாரில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை FIFA வௌியிட்டுள்ளது.
8 மைதானங்களில், 28 நாட்களுக்கு இந்த கால்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
குழுக்களுக்கு இடையில், ஒரு நாளைக்கு நான்கு போட்டிகள் வீதம் இடம்பெறவுள்ளன.
நவம்பர் முதலாம் திகதி இடம்பெறும் முதல் போட்டி பேய்ட் மைதானத்திலும் இறுதிப்போட்டி டிசம்பர் 18 ஆம் திகதி மாலை 6 மணிக்கு லுசைல் மைதானத்திலும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
