முகக்கவசத்தின் ஊடாக வைரஸிலிருந்து பாதுகாப்பு

முகக்கவசத்தின் ஊடாக வைரஸிலிருந்து பாதுகாப்பு

முகக்கவசத்தின் ஊடாக வைரஸிலிருந்து பாதுகாப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Jul, 2020 | 9:16 am

Colombo (News 1st) முகக்கவசங்களை அணிவதனூடாக கொரோனா நோயாளர்களிடமிருந்து வைரஸ் சூழலில் பரவுவதை குறைத்துக்கொள்ள முடியும் என இலங்கை சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறைவான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் அற்ற நிலையிலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என சங்கத்தின் ஆய்வுப் பணிப்பாளர் துஷ்யந்தர மெதகெதர தெரிவித்துள்ளார்.

இதனால் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவௌியை பேணுவதுடன் பொதுமக்கள் அதிகம் சஞ்சரிக்கும் இடங்களில் சளியை வௌியேற்றுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெவ்வேறு நோய் நிலைமைகளினால் அவதியுறும் நோயாளர்களும் இந்த அறிவுறுத்தலை பின்பற்றுவது உயிர் ஆபத்துகளை தவிர்த்துக்கொள்ள உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்