மீண்டும் வளர்ச்சிப் பாதையில் சீன பொருளாதாரம்

மீண்டும் வளர்ச்சிப் பாதையில் சீன பொருளாதாரம்

மீண்டும் வளர்ச்சிப் பாதையில் சீன பொருளாதாரம்

எழுத்தாளர் Bella Dalima

16 Jul, 2020 | 3:50 pm

Colombo (News 1st) சீன பொருளாதாரம் 2020-இன் இரண்டாம் காலாண்டில் 3.2 வீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

கொரொனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியின் பின்னர் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸிற்கு எதிரான முடக்கல் அமுலிலிருந்த 2020-இன் முதல் மூன்றுமாத காலப்பகுதியில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது.

இந்த நிலையில், நேற்று வௌியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சீனாவின் மொத்த தேசிய உற்பத்தியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்