பில் கேட்ஸ் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் ஊடுருவல்

பில் கேட்ஸ் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் ஊடுருவல்

பில் கேட்ஸ் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் ஊடுருவல்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

16 Jul, 2020 | 8:33 am

Colombo (News 1st) எலன் மஸ்க் (Elon Musk), Jeff Bezos மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்ட கோடீஸ்வரர்களின் ட்விட்டர் கணக்குகள் ஊடுருவப்பட்டுள்ளன.

உலக செல்வந்தர்களுள் ஒருவரான பில்கேட்ஸின் ட்விட்டர் கணக்கில் “ஆயிரம் டொலர்களை நீங்கள் வழங்கினால் அதனை இரட்டிப்பாக்கி தருவேன்” என பொருள்படும் விதத்தில் பதிவிடப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது.

Elon Musk, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைவரின் ட்விட்டர் கணக்குகளும் ஊடுருவப்பட்டு இவ்வாறு ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

பிட்கொய்ன் எனப்படும் இணையவழி பணப்பரிமாற்ற முறையீனூடாக வௌிப்படையாக இந்த பணக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

கணினியூடான இரகசிய எழுத்துக்கலையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள தரவுகளை கொண்டு முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் நிதி கொடுக்கல் வாங்கல் முறைமையே பிட்கொய்ன் எனப்படுகின்றது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜோ பைடன் மற்றும் கானியா வெஸ்ட் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளும் இந்த முறைகேட்டில் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்