தனியார் துறையினருக்கான ஊதியம் தொடர்பில் இணக்கம்

தனியார் துறையினருக்கான ஊதியம் தொடர்பில் இணக்கம்

தனியார் துறையினருக்கான ஊதியம் தொடர்பில் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

16 Jul, 2020 | 1:13 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் தொழிலின்மை காரணமாக ஊழியர்களை வீடுகளில் தங்கவைக்க நேரிட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் 50 வீதம் அல்லது 14,500 ரூபா ஆகிய இரண்டில் மிகவும் சாதகமான தொகையை செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சேவை வழங்குநர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் திறன்விருத்தி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த இணக்கப்பாட்டிற்கு அமைய தனியார் துறையினருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை குறித்த தொகையை செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்