ஹக்மனயில் பொலிஸார் மீது டிப்பரால் மோதிவிட்டு தப்பிச்சென்றவருக்கு விளக்கமறியல்

ஹக்மனயில் பொலிஸார் மீது டிப்பரால் மோதிவிட்டு தப்பிச்சென்றவருக்கு விளக்கமறியல்

ஹக்மனயில் பொலிஸார் மீது டிப்பரால் மோதிவிட்டு தப்பிச்சென்றவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2020 | 4:08 pm

Colombo (News 1st) ஹக்மன பகுதியில் வீதித்தடை போடப்பட்டிருந்த இடத்தில் கடமையிலிருந்த பொலிஸார் மீது மோதிவிட்டு தப்பிச்சென்ற டிப்பரின் சாரதி எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொலை, கொலை முயற்சி, கடமையிலிருந்த அதிகாரிகளுக்கு சிறு மற்றும் பாரிய காயங்களை ஏற்படுத்தியமை, ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியமை, பிழையான பாதையில் வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஹக்மன – கிரிந்த நகரில் வீதித் தடைக்கருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது டிப்பர் மோதியதில் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் (13) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்ததுடன், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹக்மன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 36 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்