போலி பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம்… – அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு

போலி பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம்… – அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு

போலி பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம்… – அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2020 | 9:20 am

Colombo (News 1st) கொரோனா தொற்று தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவோர் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவமால் இருப்பதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், கொரோனா தொற்றுக்குள்ளானோர் மற்றும் அவர்களோடு தொடர்புகளைப் பேணியவர்களை அடையாளம் காணல் மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், தனிமைப்படுத்தலில் உள்ளோர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புவதற்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இத்தகையோர் பொது விடுமுறை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுதல் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் , அத்தகைய தீர்மானங்கள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லை என பொதுமக்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது.

ஆகவே, போலியான தகவல்களுக்கு ஏமாறாமல் அவதானத்துடன் செயற்படுமாறு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்