தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்த வேண்டாம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்த வேண்டாம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்த வேண்டாம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2020 | 3:33 pm

Colombo (News 1st) தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சில வேட்பாளர்கள் தமது பிரசாரங்களுக்காக காணொளிகள், விளம்பரங்கள், சுவரொட்டிகளில் சிறுவர்களைப் பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் கண்காணிப்பு அமைப்புகளினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனால், சிறுவர்களின் ஆளுமை வளர்ச்சி, மனநிலை, அடையாளம் மற்றும் அவர்களின் எதிர்காலம் என்பன மோசமாகப் பாதிக்கப்படலாமென ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்