கொழும்பில் சொகுசு தொடர்மாடிக் குடியிருப்புகளை வழங்குவதாகக் கூறி பண மோசடி

கொழும்பில் சொகுசு தொடர்மாடிக் குடியிருப்புகளை வழங்குவதாகக் கூறி பண மோசடி

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2020 | 9:20 pm

Colombo (News 1st) மக்களின் பணம் பாரியளவில் மோசடி செய்யப்படும் பல சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகின.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையொன்றின் போது அத்தகைய மற்றுமொரு மோசடி சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வௌியாகின.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் சொகுசு தொடர்மாடிக் குடியிருப்புகளை வழங்குவதாகக் கூறி கொள்வனவாளர்களிடமிருந்து பணத்தை வசூலித்து, மோசடி செய்ததாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

275 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக Blue Ocean Breeze  மற்றும் Blue Ocean Realty என்ற இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக கொள்வனவாளர் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் குறித்த நிறுவனத்தின் இரண்டு பணிப்பாளர்களுக்கும் அறிவித்தல் பிறப்பித்தது.

முறைப்பாட்டாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் ஆஜராகியிருந்தது.

இதன்போது, பணிப்பாளர்களான சிவராஜா துமிலன் மற்றும் சிவராஜா துலனி ஆகியோருக்கு நீதிமன்றத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டதுடன், அவர்களுக்கு வௌிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.

மீண்டும் இந்த வழக்கு செப்டம்பர் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்