மக்கொனவில் கடலில் மூழ்கி காணாமல் போன சகோதரிகளின் சடலங்கள் கரையொதுங்கின 

by Staff Writer 14-07-2020 | 11:45 AM
Colombo (News 1st) பேருவளை - மக்கொன பகுதியில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட 2 சிறுமிகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மக்கொன கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். தமது நண்பர்களுடன் மக்கொன உஸ்வெல்ல கடற்கரையில் விளையாட சென்றபோது, இந்த சிறுமிகள் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர். கடல் அலையில் சிக்குண்ட ஏனைய இருவர் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். பேருவல பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரிகளே இவ்வாறு கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.