மக்கள் சந்திப்பிற்கு இடையூறு: அனுஷா சந்திரசேகரன் அக்கரப்பத்தனை பொலிஸில் முறைப்பாடு

மக்கள் சந்திப்பிற்கு இடையூறு: அனுஷா சந்திரசேகரன் அக்கரப்பத்தனை பொலிஸில் முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

14 Jul, 2020 | 6:48 pm

Colombo (News 1st) சுயேட்சைக் குழு உறுப்பினர் அனுஷா சந்திரசேகரன் அக்கரப்பத்தனை பொலிஸில் இன்று முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அக்கரப்பத்தனையில் நேற்று முன்தினம் அனுஷா சந்திரசேகரன் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பொன்றின் போது அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளர்களால் இடையூறு விளைவிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மக்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட அமைதியின்மையில் காயமடைந்த ஒருவர் அக்கரப்பத்தனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்