பொலிஸார் மீது டிப்பர் வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு 

பொலிஸார் மீது டிப்பர் வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு 

பொலிஸார் மீது டிப்பர் வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு 

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2020 | 8:42 am

Colombo (News 1st) கிரிந்த நகரில் வீதி தடைக்கருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது டிப்பர் மோதியதில் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மீது மோதிய டிப்பர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதன்போது காயமடைந்த மேலும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹக்மன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 36 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே விபத்தில் உயிரிழந்தவராவார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்