பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஒத்திகை

பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஒத்திகை

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2020 | 9:18 pm

Colombo (News 1st) அவசர நிலை ஏற்பட்டால் முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விசேட ஒத்திகை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.

இவ்வாறானதொரு ஒத்திகை பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாக முன்னெடுக்கப்பட்டதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

சாதாரண நாட்களில் பாராளுமன்ற செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதைப் போலவே இன்றும் முற்பகல் 10.30-க்கு சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சபை விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், விவாதத்திற்கு இடையில் ஏற்படக்கூடிய இடர்கள், பிரமுகர் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட செயற்பாடுகள் குறித்து இதன்போது ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயற்பாட்டு கண்காணிப்பு மத்திய நிலையத்திலிருந்து இந்த செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.

இந்த ஒத்திகையில், இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், புலனாய்வுப் பிரிவினர், தீயணைப்பு பிரிவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

நான்காவது கட்டளைப் படையணியின் ஒத்துழைப்புடன் இந்த ஒத்திகை முன்னெடுக்கப்பட்டதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்