தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

by Staff Writer 14-07-2020 | 8:15 AM
Colombo (News 1st) 2020 பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான இரண்டாம் நாள் இன்றாகும். இன்றும் நாளையும் ஏனைய அரச நிறுவனங்களின் ஊழியர்களும் எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் பாதுகாப்புப் பிரிவினரும் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்கள் ஊடாக வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7,5085 பேர் தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்களிப்பின் முதல் நாளான நேற்று சுகாதார மருத்துவ அதிகாரிகள் காரியாலயத்தின் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள், குடும்பநல சுகாதார அதிகாரிகள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் நேற்று தபால் மூலம் வாக்களித்தனர். எவ்வாறாயினும், கொரோனா தொற்றினால் இராஜாங்கனை பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளது. 2020 பொதுத் தேர்தல் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.