சிறுபோக நெல் அறுவடை கொள்வனவிற்கான நிதி ஒதுக்கீடு

சிறுபோக நெல் அறுவடை கொள்வனவிற்கான நிதி ஒதுக்கீடு

by Bella Dalima 14-07-2020 | 3:59 PM
Colombo (News 1st) சிறுபோக நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்கான நிதியை திறைசேரி, நெல் கொள்வனவு சபைக்கு ஒதுக்கியுள்ளது. ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபா நிர்ணய விலையில் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. நெல்லை கொள்வனவு செய்வதற்காக, நெல் கொள்வனவு சபையின் அனைத்து களஞ்சியசாலைகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் ஒரு கிலோ நாட்டரிசி 38 ரூபாவிற்கும் சம்பா நெல் 41 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டது. எனினும், இம்முறை அனைத்து வகையான நெல்லையும் 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.