பஸ்களில் இடம்பெறும் வியாபாரத்தை நிறுத்த நடவடிக்கை

பஸ்களில் இடம்பெறும் வியாபாரத்தை நிறுத்த நடவடிக்கை

by Staff Writer 13-07-2020 | 4:45 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களில் தண்ணீர் உள்ளிட்ட மென்பானங்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். பஸ்களில் விற்பனையில் ஈடுபடுவோர் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்படுவதாக பொதுமக்களிடமிருந்து, முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக போக்குவரத்து அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் பஸ்களுக்குள் தண்ணீர் போத்தல்கள் மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களினால் கொரோனா பரவக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனால் பஸ்களுக்குள் இடம்பெறும் விற்பனை செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கு பாதுகாப்பு தரப்பினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, ரயில்களுக்குள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட கடந்த மார்ச் மாதம் முதல் ரயில்வே திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.