வட்டுக்கோட்டையில் 124 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்

வட்டுக்கோட்டையில் 124 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்

வட்டுக்கோட்டையில் 124 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2020 | 2:46 pm

Colombo (News 1st) யாழ். வட்டுக்கோட்டையில் 124 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 40 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் 4 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேனொன்றை சோதனைக்குட்படுத்திய போது கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லிஹிரியாகம பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 38 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்