போலந்து நாட்டின் ஜனாதிபதியாக Andrzej Duda தெரிவு

போலந்து நாட்டின் ஜனாதிபதியாக Andrzej Duda தெரிவு

போலந்து நாட்டின் ஜனாதிபதியாக Andrzej Duda தெரிவு

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2020 | 5:36 pm

Colombo (News 1st) போலந்து ஜனாதிபதியாக அன்ட்ரெஜ் டுடா (Andrzej Duda) மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (12) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எதிர்த்து போட்டியிட்ட Rafal Trzaskowski ஐ சிறிதளவு வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

ஐனாதிபதி டுடா, 51.2 வீத வாக்குகளை பெற்றுக்கொண்டதாக போலந்தின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1989 ஆம் ஆண்டு போலந்திலிருந்து கம்யூனிஸம் அகற்றப்பட்ட பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்