நெல்சன் மண்டேலாவின் புதல்வி Zindzi Mandela காலமானார்

நெல்சன் மண்டேலாவின் புதல்வி Zindzi Mandela காலமானார்

நெல்சன் மண்டேலாவின் புதல்வி Zindzi Mandela காலமானார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

13 Jul, 2020 | 3:40 pm

Colombo (News 1st) தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா (Zindzi Mandela) தனது 59 ஆவது வயதில் இன்று (13) காலமானார்.

நெல்சன் மண்டேலா மற்றும் வின்னி மடிகிஸெலா ஆகியோரின் புதல்வியாகிய இவர், டென்மார்க்கிற்கான தென்னாபிரிக்க தூதுவராவார்.

Zindzi Mandela ஜொஹன்னஸ்பேர்க்கில் இன்று காலை உயிரிழந்ததாகவும் அவரது மரணத்தினை குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தென்னாபிரிக்க அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்