சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது 

சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது 

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2020 | 8:18 pm

Colombo (News 1st) அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்