Colombo (News 1st) இஸ்ரேலில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கையாளப்படும் விதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய மக்களால் டெல் அவிவ் நகரில் உள்ள ரபின் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள், முகக்கவசம் அணிந்திருந்தாலும் சமூக இடைவௌியை பேணவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி, மெத்தனப் போக்காகவே கிடைப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.