by Staff Writer 12-07-2020 | 12:01 PM
Colombo (News 1st) மொறட்டுவை - லுனாவ பகுதியில் பொலிஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் சார்ஜன்ட் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த 39 வயதான நபரின் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயமேற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.