மாலி நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் ஜனாதிபதியால் கலைப்பு

மாலி நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் ஜனாதிபதியால் கலைப்பு

மாலி நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் ஜனாதிபதியால் கலைப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Jul, 2020 | 12:21 pm

Colombo (News 1st) மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இடம்பெறும் போராட்டங்களை அடுத்து, அரசியலமைப்பு நீதிமன்றத்தைக் கலைப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் பௌபகார் கெய்டா (Ibrahim Boubacar Keita) அறிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அமைதிப்படுத்தும் நோக்கில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக கடந்த வௌ்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போதான வன்முறைகளில் நால்வர் உயிரிழந்திருந்தனர்.

இவ்வாறான வன்முறைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாமென தாம் அறிவுறுத்தியுள்ளதாக மாலி ஜனாதிபதி Ibrahim Boubacar Keita தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்