சட்டவிரோதமாக கடல் வழியாக வருகை தந்த நால்வர் கைது 

சட்டவிரோதமாக கடல் வழியாக வருகை தந்த நால்வர் கைது 

சட்டவிரோதமாக கடல் வழியாக வருகை தந்த நால்வர் கைது 

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2020 | 1:59 pm

Colombo (News 1st) இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருகை தந்த குற்றச்சாட்டில் நேற்று (11) கைதான நால்வரில் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுவாசக் கோளாறு காரணமாக அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் வருகைதந்த நால்வர் யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் இருவர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களே படகை செலுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏனைய இருவரில் ஒருவர் இலங்கை அகதியாக தமிழகத்தில் வசித்தவர் என கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரியபண்டார கூறினார்.

புகைப்படங்கள் : இலங்கை கடற்படை 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்