அரிசி விற்பனையில் மோசடி: விசாரணை ஆரம்பம்

அரிசி விற்பனையில் மோசடி: விசாரணை ஆரம்பம்

அரிசி விற்பனையில் மோசடி: விசாரணை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2020 | 9:19 am

Colombo (News 1st) நீண்ட வௌ்ளை அரிசியை பாஸ்மதி அரிசி என தெரிவித்து விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புறக்கோட்டையில் சில வர்த்தக நிலையங்களில் இவ்வாறான மோசடி இடம்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயாகம் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

விசாரணைகளினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட, பாஸ்மதி என விற்பனை செய்யப்பட்ட அரிசி மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்திய போது அவை நீண்ட வௌ்ளை அரிசி என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயாகம் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

பாஸ்மதி அரிசியை கொள்வனவு செய்யும் போது, பொதுமக்கள் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் இந்த விடயம் தொடர்பிலான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்