by Staff Writer 11-07-2020 | 7:28 PM
Colombo (News 1st) ஹோமாகம, பிட்டிபன பகுதியில் T-56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் சாரதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய ஹேனாரத்ன கூறினார்.
பிட்டிபன பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாதாளத் துப்பாக்கி களஞ்சியசாலையுடனும் அங்குள்ள துப்பாக்கிகளுடனும் குறித்த கான்ஸ்டபிளுக்கு தொடர்புள்ளதாக சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 750 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.