சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி

சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி

by Bella Dalima 11-07-2020 | 6:03 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் மொத்த 93 ஆசனங்களில் 83 ஆசனங்களைப் பெற்று மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி , 61. 2 வீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், இம்முறை பொதுத்தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி, பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. எவ்வாறாயினும், கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 70 வீத வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இம்முறை பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியாக களமிறங்கிய தொழிலாளர் கட்சி ஏனைய 10 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளது. எவ்வாறாயினும், சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் தொழிலாளர் கட்சி பெற்றுக்கொண்ட அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களாக இது பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பலத்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சிங்கப்பூர் பொதுத்தேர்தல் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.