WHO நிபுணர் குழு சீனா சென்றுள்ளது

கொரோனா எங்கே தோற்றம் பெற்றது என ஆராய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு சீனா சென்றுள்ளது

by Bella Dalima 11-07-2020 | 4:33 PM
Colombo (News 1st) கொரோனா நோய்த்தொற்றின் தோற்றம் பற்றியும் அந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அறிவதற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு நேற்று (10) சீனாவிற்கு சென்றுள்ளது. சீனாவில் வுஹானில் தோன்றிப் பரவிய கொரோனா தொற்று பற்றிய விபரங்களை வெளியிட சீனா தொடர்ந்து தாமதித்து வந்த நிலையில், இந்த நிபுணர் குழு சீனா சென்றடைந்தது. விலங்குகள் நலத்துறை நிபுணர், தொற்றுநோய் துறை நிபுணர்கள், சீனாவின் பல்வேறு துறை நிபுணர்களை பெய்ஜிங்கில் சந்தித்து, கொரோனா நோய் பரவல் குறித்து ஆராய்ந்து, சில முக்கிய பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. முக்கியமாக இந்த கொரோனா வைரஸ், ஏதேனும் உயிரினத்திடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியதா, அவ்வாறெனில் அது எந்த உயிரினத்திடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதை ஆராய்வதே நிபுணர் குழுவின் முக்கிய நோக்கமாகும்.