மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாக்கிரகப் போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன

மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாக்கிரகப் போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2020 | 5:51 pm

Colombo (News 1st) ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாக்கிரகப் போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவைப் பெற்று இந்த சத்தியாக்கிரகப் போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு – காந்திபூங்கா வளாகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், நீதிமன்ற தடை உத்தரவினால் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெறவில்லை.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் மற்றுமொரு சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஏறாவூர் பொலிஸார், நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்று இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கிழக்கு தொல்பொருள் செயலணியின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த சத்தியாக்கிரகப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்