கந்தக்காட்டில் கடமையாற்றிய மற்றொருவருக்கும் கொரோனா

கந்தக்காட்டில் கடமையாற்றிய மற்றொருவருக்கும் கொரோனா

கந்தக்காட்டில் கடமையாற்றிய மற்றொருவருக்கும் கொரோனா

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2020 | 3:45 pm

Colombo (News 1st) கந்தக்காடு தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையத்தில் ஆலோசகராகக் கடமையாற்றிய மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் இராஜாங்கணை பகுதியில் வசிப்பவராவார்.

குறித்த பகுதியில் இவருடன் தொடர்புபட்ட 300 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 70 குழந்தைகளும் அடங்குவர்.

முன்னதாக கந்தக்காடு  நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மாரவில பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாட்டில் இதுவரை 2,454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (10) மாத்திரம் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் 283 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனையவர்களில் 09 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களாவர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த மூன்று பேருக்கும் நேற்று மாலை COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாகிஸ்தானிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளருடன் பழகிய மேலும் 03 பேருக்கு நேற்று மாலை COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் பழகிய மற்றுமொரு கைதிக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 463 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, 1,980 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து வௌியில் தொற்று பரவாதிருக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்தும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தை போல ஏனைய பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பு தொடந்தும் தேவைப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

வர்த்தக நிலையங்கள், சிறப்பு அங்காடிகள், அழகுக்கலை நிலையங்கள், சிகையலங்கார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இந்த விடயம் தொடர்பில் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்