விலங்குகளிடமிருந்து நோய் பரவுவதைத் தடுக்காவிட்டால் வருடத்தில் 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2020 | 5:06 pm

Colombo (News 1st) விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வன விலங்குகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவில்லை எனில், இவ்வாறு நோய் பரவும் நிலைமை மேலும் அதிகரிக்குமென ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிக இறைச்சி உட்கொள்ளுதல், மாற்றமடையும் விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றம் என்பன COVID-19 போன்ற நோய்களுக்கு காரணமாவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவ்வாறு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்காவிட்டால், வருடமொன்றில் 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அடுத்த இரண்டு வருடங்களில் COVID-19 தொற்றால் உலகப் பொருளாதாரத்தில் 9 ட்ரில்லியன் டொலர்கள் செலவாகுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.​

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்