போதைப்பொருள் விநியோகஸ்தர் களு மல்லி கைது

போதைப்பொருள் விநியோகஸ்தர் களு மல்லி கைது

போதைப்பொருள் விநியோகஸ்தர் களு மல்லி கைது

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2020 | 3:49 pm

Colombo (News 1st) கொஸ்கொட தாரக்க என்ற திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரின் போதைப்பொருள் விநியோகஸ்தராக செயற்பட்ட ‘களு மல்லி’ என்றழைக்கப்படும் ரொஹான் பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, அங்கொடை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 03 கிராம் 230 மில்லிகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

அங்கொடை – மிஹிரி பகுதியை சேர்ந்த 46 வயதானவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 3 மாதங்களாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளில் 428 இலட்சம் ரூபா பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த பணப் பரிமாற்றம் களு மல்லி என்பவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இந்நபர் இதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தினரிடம் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான விசேட பயிற்சியைப் பெற்ற ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்