இராஜகிரிய விபத்து தொடர்பில் பாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்

இராஜகிரிய விபத்து தொடர்பில் பாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2020 | 8:08 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் இன்று வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்திற்கு அருகில், இளைஞர் ஒருவரை விபத்திற்குள்ளாக்கியமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யாமை, கவனயீனமாக வாகனத்தை செலுத்தியமை உள்ளிட்ட நான்கு குற்றங்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரன்தீப் சம்பத் குணவர்தன என்ற நபரை விபத்திற்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு குற்றப்புலனாவுத் திணைக்களம் முன்வைத்த விசாரணை அறிக்கையை கருத்திற்கொண்டு சட்ட மா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்