தேர்தல் பிரசார ஸ்டிக்கர்களை அகற்ற நடவடிக்கை

பஸ்கள், முச்சக்கரவண்டிகளில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் பிரசார ஸ்டிக்கர்களை அகற்ற நடவடிக்கை

by Staff Writer 09-07-2020 | 5:52 PM
Colombo (News 1st) வேட்பாளர்கள் பயணிக்கும் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸ்கள், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் பிரசார ஸ்டிக்கர்களை அகற்றுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் அறிக்கை ஒன்றும் வௌியிடப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரசாரங்களை வௌிப்படுத்தும் வகையில் புள்ளடிகள், நிழற்படங்கள், சின்னங்கள் ஆகியன அடங்கிய ஸ்டிக்கர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்வதற்கு திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.